Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷுக்கு நோ சொன்ன சூப்பர்ஸ்டார், விஜய் சேதுபதியை ஓகே செய்தது எப்படி?
விஜய் சேதுபதியை தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க ரஜினிகாந்த் ஓகே கூறியதன் தன் சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா மற்றும் 2. ஓ படங்கள் உருவாகி இருக்கிறது. இதில் 2.ஓ படத்தின் கிராபிக்ஸ் பணி தாமதமாவதால் முதலில் காலா படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதையடுத்து, இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் சங்க போராட்டத்தால் புதுப்படங்கள் வெளியீடு தள்ளிப்போடப்பட்டது. அதையடுத்து, ஜூன் மாதத்தில் ரம்ஜானை முன்னிட்டு படத்தை வெளியிட இருப்பதாக தனுஷ் தெரிவித்து விட்டார். இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார். தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். ஈஸ்வரி ராவ், அரவிந்த் ஆகாஷ், வத்திக்குச்சி தீலிபன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினிக்கு மூன்று மகன்கள் கதாபாத்திரம் இருக்கிறது. இதனால், ஒரு கதாபாத்திரம் தனக்கு கிடைக்கும் என தனுஷ் எதிர்பார்த்து இருந்தாராம். இருந்தும், ரஜினியிடம் இதற்கு ஒப்புதல் வாங்கிக்கொள்ள எண்ணிய பா.ரஞ்சித், இதுகுறித்து, ரஜினியிடம் சம்மதம் கேட்டு இருக்கிறார். ஆனால், ரஜினியோ வேண்டாம் தனுஷ் தயாரிப்பாளராகவே இருக்கட்டும் என மறுத்து விட்டார். மருமகனாக இருந்தாலும் கதாபாத்திரம் கருதி வேண்டாம் எனக் கூறியதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், தனுஷ் போல முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்கக்கூடும் என ஒருதரப்பு அடித்து கூறுகிறது. ஏனெனில், வில்லன் இல்லாமல் வேறு கதாபாத்திரம் என்றால் வில்லனாக போடப்படும் நாயகனுக்கு தான் ரஜினியை அடுத்த முக்கியத்துவம் கிடைக்கும். இது விஜய் சேதுபதிக்கு சரியாக இருக்காது. அதனால், ரஜினியை மிரட்டவே விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால், தனுஷ் ஒதுக்கிய ரஜினி, விஜய் சேதுபதியை எப்படி சேர்த்துக்கொண்டார். இதுகுறித்து படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரிக்கும் போது, வித்தியாசமான கதையில் உருவாக இருக்கும் இப்படத்தில் ரஜினியை எதிர்க்க ஒரு வலுவான நாயகன் தான் இருக்க வேண்டும். இதை விஜய் சேதுபதி சரியாக செய்வார் என ரஜினியே நம்பியதால் தான் அவருக்கு ஓகே சொல்லி இருக்கிறார் சூப்பர்ஸ்டார்.
