Tamil Cinema News | சினிமா செய்திகள்
அப்படி என்னதான் பிரச்சனை.. கடுப்பான தனுஷ்
தலையை பியித்து கொள்ளும் தனுஷ்
வடசென்னை, மாரி-2 என தொடர் வெற்றிகளின் மூலம் தனுஷ் உயரே பறந்து சென்று கொண்டிருக்கிறார். நேற்று எடுத்த படங்கள் எல்லாம் வெளியாகிக்கொண்டிருக்கிறது, ஆனால் எப்பவோ எடுத்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீஸ் ஆகுற மாதிரி தெரியவில்லை.
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தினை வெளியிடுவதற்கான இரவு பகலாக வேலை செய்து வருகின்றன படக்குழுவினர்.
படம் ஏப்ரல் மாதம் விடுமுறை நாட்களில் வெளிவரும் என தெரிகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து வெளியான மறுவார்த்தை பேசாதே பாடல்கள் வெளிவந்து 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.
தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வரும் தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார். பின்பு ஒரு வரலாற்று படத்தை அவரே இயக்கி நடிக்கவிருக்கிறார்.
அதற்கிடையில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். ஒரு படம் ஹிட் ஆனால் தனுஷ்க்கு ஒரு ஹேட் ட்ரிக் வெற்றி கிடைக்கும் அதுக்கு கவுதம் மேனன்தான் பதில் சொல்லணும்.
