Connect with us
boomerang-movie

ஜூன் 17-ல் தனுஷின் அடுத்த படம் ரிலீஸ்!

ஜூன் 17-ல் தனுஷின் அடுத்த படம் ரிலீஸ்!

ஹிந்தியில் உருவான ‘நில் பட்டே சன்னாட்டா’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அம்மா கணக்கு’ படத்தை நடிகர் தனுஷ் தனது உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் நடிகை அமலாபால் 13 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்துள்ளார். மேலும் இதில் ரேவதி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹிந்தியில் இப்படத்தை இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இப்படத்தை இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். தனுஷ் தயாரித்து வெளியான அத்தனை படங்களுமே வெற்றி பெற்றிருப்பதால் இந்த படமும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூன் 17-ம் தேதி திரைக்கு வரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top