Tamil Cinema News | சினிமா செய்திகள்
13 வருடத்திற்கு பிறகு மீண்டும் தனுஷுடன் இணையும் பிரபல நடிகை.!
தனுஷுடன் இணையும் பிரபல நடிகை.!
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை இரண்டாம் பாகமும் மிக வேகமாக உருவாகி வருகிறது.
இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.
இந்த படத்தில் நடிகை சினேகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் தற்போது லீக் ஆகி உள்ளன, இதற்கு முன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்தில் நடிகை சினேகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும், மேலும் இந்த கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தனுஷுடன் இணைய இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. புதுபேட்டை படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

sneha-with-prasanna gym video
