Tamil Cinema News | சினிமா செய்திகள்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் புதிய படம் இயக்குனர் யார் தெரியுமா.?

Dhanush: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் புதிய படம் இயக்குனர் யார் தெரியுமா.?
Dhanush: நடிகர் தனுசுக்கு கடைசியாக வெளியாகிய திரைப்படம் மாரி- 2, இந்த படத்தில் ரவுடி பேபி பாடல், பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது, அதுவும் Tik டாக்கில் இந்த பாடலுக்கு தான் இளசுகள் நடனம் ஆடுகிறது.
இதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா , மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் நடித்து வருகிறார்.
இதில் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்தநிலையில் விஸ்வாசம் படத்தின் பொழுது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார்கள்.

maari-2-dhanush-post
அவர்கள் கூறியதாவது துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் எங்களுடைய தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தான் அது, அந்த படத்தின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது, சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், தனுஷின் கொடி, ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் தனுஷ்.
