Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மெஹா ஹிட் இயக்குனருடன் இணைந்து தனுஷ் புதிய படம்.! நடிகை யார் தெரியுமா.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் லட்சுமி மேனன் இவர் கும்கி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர், அதன் பின்பு நடித்த திரைப்படங்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை, இவர் கொஞ்சம் குண்டாக ஆனதால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

அதனால் தனது படிப்பில் முழு கவனம் செலுத்தி வந்தார், இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தனுஷ் வடசென்னை என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்துவிட்டு அடுத்ததாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை ராட்சசன் இயக்குனர் ராம்குமார் தான் இயக்க இருக்கிறார். ராம்குமார் இயக்கிய ராட்சசன் படம் இன்னும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

vada chennai

மேலும் ராம்குமார் தனுஷ் இணையும் இந்த புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க இருக்கிறார், மேலும் படத்தில்  மற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்யும்  பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top