தனுஷ் நடித்துள்ள விஐபி2 படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. அதில் பாலிவுட் நடிகை கஜோல் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது ஹாலிவுட் படத்தில் கவனம் செலுத்தி வரும் தனுஷ், அது முடிந்தவுடன் வடசென்னை படத்தை துவங்கவுள்ளார். நீண்ட நாட்கள் முன்பே துவங்கபட்ட வடசென்னையின் 80% ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது. அதனால் மீதியுள்ள பகுதி விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஐபி மட்டுமின்றி தனுஷ் இயக்குனராக அறிமுகமாகிய பா.பாண்டி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என தனுஷ் அறிவித்துள்ளார். இது பற்றி ராஜ்கிரணோடு பேசிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அதற்க்கு முன்பாக ஒரு கமர்சியல் படம் இயக்கவேண்டும் என விரும்புவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.