Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாரா வாழ்க்கையிலும் புகுந்து விளையாடிய தனுஷ்.. தலைவன் விளையாடாத ஏரியாவே இல்ல போல!
தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகைகளுக்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அந்த பழியை தூக்கி தனுஷ் மீது போட்டு விடுவது ஒன்றும் புதிதான விஷயமல்ல.
அவரும் அப்படி இருந்ததாக ஒரு சில செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் அவையெல்லாம் உண்மையா என்பது தெரியாது.
ஆனால் நயன்தாரா வாழ்க்கையில் தனுஷ் புகுந்து விளையாடியுள்ளது மட்டும் உறுதியாகியுள்ளது. இந்த செய்தி தான் தற்போது தனுஷ் மற்றும் நயன்தாரா ரசிகர்களிடையே கிச்சு கிச்சு மூட்டி உள்ளது.
நயன்தாரா தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார் என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்னரே ஒரு படத்தில் களமிறங்க இருந்தாராம்.
அது வேறு யாரும் படமும் அல்ல. தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் படத்தில் தான். சுள்ளான் படத்தில் முதல் முதலில் ஹீரோயினாக போட அந்த படத்தின் இயக்குனர் ரமணா முதலில் நயன்தாராவை தான் தேர்வு செய்தாராம்.
ஆனால் அப்போது தனுஷ் அந்த விஷயத்தில் தலையிட்டு நயன்தாரா தனக்கு சரியான ஜோடி இல்லை என நிராகரித்து விட்டாராம். பின்னர் காலம் கடந்த பிறகு யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுடன் தனுஷ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
