Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்தடுத்து குறி வைத்து அடிக்கும் தனுஷ்!
தனுஷ்-வெற்றிமாறன் இணைந்து ஒரு படம் வெளிவந்தால் கண்டிப்பாக அது தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். இப்பொழுது தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தில் தயாரித்து, நடித்து கொண்டிருக்கும் படம் வடசென்னை. அவருடைய ஆஸ்தான இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார் மேலும் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

Vada-Chennai
வடசென்னை படத்தை வெற்றிமாறன் மூன்று பாகங்களாக இயக்குகிறார் இப்பொழுது முதல் பாகம் எடுக்க முடித்து விட்டனர் இந்த படத்தின் பாடல் கேசட் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் வெளிவந்தது வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது. வட சென்னை படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் கூடியது.
வடசென்னை படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெற உள்ள பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் வட சென்னை படம் திரையிடப்பட இருக்கிறது. பிங்யோ சர்வதேச திரைப்பட விழா வருகிற 11-ஆம் தேதி துவங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தனுஷ், தான் தயாரிக்கும் படம் அனைத்தையும் விழாக்களுக்கு விருது விழாக்களுக்கு அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்கள் விருதுகளை தட்டிச் சென்றது.
