fbpx
Connect with us

Cinemapettai

ஹாலிவுட்டுக்கு போகும் தனுஷ் பட நாயகி.. அதுவும் சூப்பர் ஹீரோயின் வேஷமாம்.. ராசிக்கார நடிகர் தான் போல!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹாலிவுட்டுக்கு போகும் தனுஷ் பட நாயகி.. அதுவும் சூப்பர் ஹீரோயின் வேஷமாம்.. ராசிக்கார நடிகர் தான் போல!

தனுஷ் நடிக்கும் படங்களில் நடிகைகளுக்கு பெயர் கிடைக்கிறதோ இல்லையோ ஏதாவது ஒரு சர்ச்சையில் கிளம்பிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதிலும் சில நாயகிகள் பெரிய அளவுக்கு வளர்ந்து விடுகிறார்கள்.

அந்தவகையில் தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் டாப்ஸி.

சமீபத்தில் ஹிந்தியில் இவர் நடிப்பில் வெளிவந்த பிங்க், கேம் ஓவர் போன்ற படங்கள் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோயின் வேடத்துக்கு தேர்வாகியுள்ளார்.

ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் டிஸ்னி நிறுவனமும் ஒன்று. பெரும்பாலும் இந்த நிறுவனத்தில் கார்ட்டூன் படங்கள் தான் அதிகம் தயாராகின்றன.

அதேபோல் சூப்பர் ஹீரோ படங்களும் தயாராகி வருகிறது. அந்த வகையில் உலகத்தில் உள்ள சூப்பர் ஹீரோ படங்களுக்கு அனைத்து மொழி நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியா சார்பாக டாப்ஸிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சமீபகாலமாக கதாநாயகியை மையப்படுத்தி வரும் படங்களில் பட்டையை கிளப்பியதால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதனால் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோரை தொடர்ந்து டாப்ஸியும் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்.

Continue Reading
To Top