fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சீயான்60 படத்தில் இணைந்த தனுஷ் பட பிரபலம்.. எகிறும் பட்ஜெட்டால் கலக்கத்தில் விஜய் பட தயாரிப்பாளர்

dhanush-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சீயான்60 படத்தில் இணைந்த தனுஷ் பட பிரபலம்.. எகிறும் பட்ஜெட்டால் கலக்கத்தில் விஜய் பட தயாரிப்பாளர்

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் சீயான் விக்ரம் நடிக்கும் சீயான்60 படத்தை இயக்க ரெடியாகியுள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்த படத்தை விக்ரமின் முந்தைய படமான கோப்ரா மற்றும் விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் தயாரிக்க உள்ளார். மேலும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு வழக்கமாக சந்தோஷ் நாராயணன்தான் இசை அமைப்பார். ஆனால் பெரிய தயாரிப்பாளர் என்றால் அவரை கழட்டி விட்டு பெரிய நடிகர்களுடன் சேர்ந்து கொள்வதால் சர்ச்சையில் இருக்கிறது அவர்களது நட்பு.

கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு பட்ஜெட் மிகக் குறைந்த அளவுதான் போடப்பட்டுள்ளதாம். அதற்கு காரணம் கோப்ரா மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் அளவுக்கு அதிகமாக செலவு செய்து விட்டதால் சிக்கனம் காட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதை புரிந்துகொள்ளாமல் பெரிய பெரிய சம்பளம் உள்ள ஆட்களையே தேர்வு செய்து வருகிறாராம் கார்த்திக் சுப்புராஜ். தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் தயாரிப்பாளர் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம். இருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் படம் என்றால் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் பல்லை கடித்து கொண்டு சமாளித்து கொண்டிருக்கிறாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top