Connect with us
Cinemapettai

Cinemapettai

suntv-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சன் டிவி சீரியலுக்கு வரும் தனுஷ் பட நடிகை.. ஒரு காலத்தில் குத்து குத்துன்னு குத்தாட்டம் போட்டவங்க!

சினிமாவில் ஒரு காலத்தில் கலக்கிய நடிகைகள் அனைவருமே தங்களுடைய மார்க்கெட் குறைந்ததும் சீரியல்களில் என்ட்ரி கொடுப்பது சாதாரண விஷயம்தான். அந்த வகையில் தேவயானி, ரம்யா கிருஷ்ணன், ராதிகா போன்ற பலபேரை குறிப்பிட்டுக் காட்டலாம்.

பெரும்பாலும் சன் டிவி சினிமாவில் ஆடி ஓய்ந்த நடிகைகளுக்கு சீரியல் வாய்ப்பு கொடுப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் சன் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பூவே உனக்காக சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் தனுஷ் பட நடிகை.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சன் டிவியில் முன்னர் போல சீரியல்கள் எதுவுமே இல்லை. முழுக்க முழுக்க சினிமா படங்கள் போல் தயாராகி வருகிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மாஸ், ரொமான்ஸ் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீரியல்களை எடுத்து வருகின்றனர்.

ஆனால் ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி போன்றவை சீரியல்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்றபடி பெண்களை கவர்வது போலவே தாலி சென்டிமென்ட், அம்மா சென்டிமென்ட், குடும்ப செண்டிமெண்ட் என வேற லெவல் டிஆர்பி பார்த்து வருகின்றனர்.

மேலும் இப்போதைக்கு சன் டிவியில் அதிக டிஆர்பி தரும் சீரியலாக இருப்பது பூவே உனக்காக தான். இந்த சீரியலில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு விஜய் டிவியில் நடித்துக் கொண்டிருந்த ஆசீம் என்பவரை ஹீரோவாக களம் இறக்கியது சன் டிவி.

அதே போல் இருக்கும் டிஆர்பி விட்டுவிடக்கூடாது என்பதற்காக தனுசுடன் திருடா திருடி படத்தில் குத்தாட்டம் போட்ட சாயா சிங்கை உள்ளே இழுத்து வந்துள்ளது. சாயாசிங்கின் கணவர் கிருஷ்ணன் என்பவரும் சன் டிவியின் பிரபல சீரியல் ஹீரோ தான்.

chaya-singh-cinemapettai

chaya-singh-cinemapettai

Continue Reading
To Top