Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷ் பட இயக்குனர் விஜய் ரசிகர் மன்ற தலைவராமே.. அட, இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக கவனிக்கப்படும் இயக்குனராக வலம் வரும் பிரபல இயக்குனர் ஒருவர் தீவிர விஜய் ஃபேன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்தவராம்.

தனுஷ் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார். அந்த வகையில் பரியேறும் பெருமாள் என்ற வெற்றி படத்தை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது கர்ணன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகப் போவதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். எப்போதுமே வளர்ந்து வரும் பிரபலங்கள் தமிழ் சினிமாவில் எந்த நடிகரின் ரசிகர் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தீவிர விஜய் ரசிகராம். மேலும் அடங்கா தமிழன் விஜய் ரசிகர் மன்றம் என்ற குழுவுக்கு தலைவராக இருந்தவராம். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இவரும் விஜய் ரசிகர் தானா என தளபதி ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல பிணைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

mariselvaraj-cinemapettai

mariselvaraj-cinemapettai

மேலும் மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைக் காலங்களில் பார்த்தால் விஜய் படத்தை மட்டும்தான் பார்ப்பாராம். அந்த அளவுக்கு தீவிர வெறியனாம். கோலிவுட்டில் உள்ள பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கும் விஜய் ஃபேவரைட் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top