இதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணுங்க.. தனுசை பற்றி பஹத் பாசில் கூறிய உண்மை

தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட கசப்பான அனுபவங்கள் வெளிவந்தாலும் ,சினிமாவில் தனது வெற்றியை தொடர்ந்து வருகிறார். அதாவது இவரது நடிப்பில் வெளியான ஹாலிவுட் படமான “தி கிரே மேன்” திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று உலக அளவில் தனுசுக்கு புகழை கிடைக்க செய்தது.

அதுவும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தனுஷை பற்றி புகழ்ந்து தள்ளினர். அதன்பிறகு அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்க வெளியாக உள்ளன. இதனால் தனுஷ் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுப்பார் என பலரும் கூறி வருகின்றனர்.

தனுஷ் பாலிவுட், ஹாலிவுட்டில் நடித்தது போல் மாலிவுட்டிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது கும்பளங்கி நைட்ஸ் படத்தில் தனுஷ் தான் முதலில் நடிக்க தேர்வாகி உள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எப்படியாவது தனுஷை படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர்.

காரணம் தனுஷ் நடித்தால் கும்பளங்கி நைட்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது அவர்களது எண்ணம். ஆனால் தனுஷ் தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்த காரணத்தால் கும்பளங்கி நைட்ஸ் படத்தில் நடிக்க முடியவில்லை. இதனைசமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கும்பலங்கி நைட்ஸ் படத்தில் நடித்த பகத் பாசிலே கூறியுள்ளார்

அதன்பிறகுதான் கும்பளங்கி நைட்ஸ் படத்தில் தன்னை நடிக்க வைத்ததாகவும் என்னுடைய நடிப்பை விட தனுஷ் படத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கும் எனவும் கூறினார். தற்போது தனுஷ் நடித்து வரும் படங்கள் அனைத்துமே தனக்கு பிடித்துள்ளது. அந்த அளவிற்கு பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என கூறியுள்ளார்.

சமீபத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து தனுஷ் பாடிய மேகம் கருக்காதே பாடல் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது. மேலும் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கின்றன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்