தனுஷ் தொடர்ந்து ரிஸ்க் இல்லாமல் நடிப்பதையே விரும்புகிறார். ஏற்கனவே கொஞ்சம் வெற்றி கண்ணில் பட்ட படங்களையே இரண்டாம் பாகமாக நடிப்பது பாதுகாப்பாய் நினைக்கிறார் தனுஷ்.

ஏற்கனவே தன் மச்சினி சௌந்தர்யா சொன்ன நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தையே தூர தூக்கி வைத்துவிட்டு, வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க சொன்னார்.

மாரி படத்திற்கும் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. புதுப்பேட்டையின் எக்ஸ்டன்டட் வெர்சனாக வடசென்னை. இவ்வளவும் இரண்டாம் பாகம். இப்போது மற்றுமொரு படம் இரண்டாம் பாகமாக உருவாக போகிறது என்கிறார்கள். அதை தனுஷும் உறுதி செய்துள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷ், த்ரிஷா நடித்த கொடி படம் தொடரியின் தோல்விக்கு பின் ரிலீஸ் ஆகி கொஞ்சம் ஆறுதல் தந்தது. அதனால், அந்த பட இயக்குனரை கூப்பிட்டு, ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி செய்ய சொல்லியுள்ளார் தனுஷ். இப்போது அந்த ஸ்க்ரிப்ட் பணியில் ஈடுபட்டுள்ளார் துரை.

இந்த படம் எப்போ ஷூட்டிங்குக்கு போகும்ன்னு மட்டும் கேக்காதீங்க.

எனை நோக்கி பாயும் தோட்டா, விஐபி2 , வடசென்னை, பவர்பாண்டி, மாரி, மாரியப்பன் என்று எல்லா படமும் பிளான் பண்ணி, அப்புறம் கால்சீட் தருவாராம் தனுஷ். அதுக்குள்ள, துரை இரண்டு படம் பண்ணிடலாம் போல!