Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷ்- மாரி செல்வராஜ் பட தலைப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போராளியாக நடிக்கிறாரா தனுஷ்
பரியேறும் பெருமாள் பட இயக்குனரின் இரண்டாவது படத்தில் தனுஷ் ஹீரோ, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு என்பது எப்பொழுதோ வெளியான தகவல். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டி 40 ஷூட் முடிந்த நிலையில், திருநெல்வேலியில் இந்த புது பட ஷூட்டிங் ஆரம்பம் ஆனது. பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் துவங்கியுள்ளனர். லால், ரஜீஷா விஜயன், நட்டி (எ) நட்ராஜ், அழகப்பெருமாள் யோகி பாபு முக்கிய ரோல்களில் நடிக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசை. எடிட்டிங் செல்வா. இப்படத்தின் தலைப்பு முன்பு கிசுகிசுத்தது போலவே கர்ணன் என்பதை தயாரிப்பாளர் தனது ட்வீட் வாயிலாக உறுதி செய்துள்ளார்.
#கர்ணன் #Karnan –
அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர்!
தொடர் படப்பிடிப்பில்..@dhanushkraja @mari_selvaraj @thevcreations #D41 pic.twitter.com/sTlhUTtMif— Kalaippuli S Thanu (@theVcreations) January 5, 2020
1999ல் நடந்த மாஞ்சோலை படுகொலை பற்றியது இப்படம் என்கின்றனர் கோலிவுட் பட்சிகள். அவ்வாறு இருப்பின் படத்தின் மையக்கரு பின்வருமாறு தான்…
மாஞ்சோலை டீ எஸ்டேட்டை சேர்ந்தவர்கள் முன்பு கைது செய்தவர்களை ரிலீஸ் செய்ய வேண்டும், 70 ரூபாய் தினக்கூலியை 100 ஆக உயர்த்த வேண்டும், கர்பகாலத்தில் விடுமுறை என கோரிக்கைகளை வைக்க திருநெல்வேலியில் இவர்கள் ஊர்வலம் செல்ல, போலீஸ் லத்தி சார்ஜ் செய்தனர். அதில் இருந்து தப்பிக்க முயலும் சமயத்தில் ஆற்றில் மூழ்கி 17 நபர்கள் இறந்தனர். (இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு வயது குழந்தை உட்பட.)