தனுஷ் இன்று ஒரு இயக்குனராக உயர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் இயக்கிய பா.பாண்டி படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் அவர் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை என 2படங்களை கொடுக்க இருந்தாலும் அடுத்து மாரி 2 படத்தில் கமிட்டாக இருந்தார்.

ஆனால் ஹாலிவுட் படம் முடித்து கொடுக்கவேண்டிய நிலை உள்ளதால் ஜுன் மாதத்தில் 15 நாட்களிலேயே அதை முடித்துவிட பிளான் போட்டுள்ளாராம்.

ஏற்கனவே கதை ரெடியாகிவிட்ட நிலையில் ஹாலிவுட் படத்தை முடித்த கையோடு மாரி 2 வில் இறங்குகிறாராம். மேலும் மாரி 1 ல் நடித்த காஜல் அகர்வால்க்கு பதிலாக வேறு ஹீரோயினையும், ஏற்கனவே இந்த படத்தில் இசையமைத்த அனிருத்தும் இதில் இல்லை என சொல்லபடுகிறது.

தனுஷ் அனிருத் கூட்டணி மீண்டும் அமைய வேண்டும் என்பதே ரசிகர்களில் ஆவல்.