தனுஷா இது? மொட்டையடிச்சு அச்சு அசல் கிரிக்கெட் வீரர் ஹர்டிக் பாண்டியா மாதிரியே இருக்காரே!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அமேசான் தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து அடுத்ததாக ஜூன் 18-ஆம் தேதி ஜகமே தந்திரம் என்ற படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் திறமையான இயக்குனர்களுடன் வெளிவருவதால் இன்னும் சில வருடங்களில் தனுஷின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விடும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

சினிமாவில் எப்படி தனுஷ் இப்போது தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறாரோ அதேபோல்தான் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா. ஆல்-ரவுண்டராக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனுஷ் கடைசியாக பிரபல கோவில் ஒன்றுக்குச் சென்றபோது மொட்டை போட்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தையும் ஹர்திக் பாண்டியாவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் மற்றும் ஹர்டிக் பாண்டியா இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவ்வளவு ஏன் அதற்கு விஜய்யின் கத்தி படத்தை வைத்து ஒரு மீம்ஸ் ரெடி பண்ணி இணையத்தில் உலாவ விட்டுள்ளனர்.

dhanush-looks-like-hardik-pandya
dhanush-looks-like-hardik-pandya
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்