Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அமெரிக்காவிலிருந்து செம ஸ்டைலாக வந்த தனுஷ்.. வைரலாகும் ஏர்போர்ட் புகைப்படம்

dhanush-cinemapettai

தமிழ் சினிமாவை உலக சினிமா ரேஞ்சுக்கு கொண்டு சென்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் தனுஷ்(dhanush). உலகத்தையே வசூலால் மிரள வைத்த அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய இயக்குனர்கள் ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கி வந்த த கிரே மேன் படப்பிடிப்பை முடித்து விட்டார்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் தனுஷின் மாமனாரும் தமிழ் சினிமாவின் டாப் நடிகருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நிலையில் மாமாவும் மருமகனும் ஓரிரு நாட்கள் ஒன்றாக பொழுதைக் கழித்துள்ளனர்.

தற்போது ஹாலிவுட் படத்தை முடித்த தனுஷ் அடுத்ததாக தமிழிலுள்ள கமிட்மென்ட்களை தொடர்ந்து அடுத்தடுத்து நடித்து முடித்துக் கொடுக்க உள்ளாராம். அந்த வகையில் முதலில் தொடங்க உள்ள திரைப்படம் கார்த்திக் நரேன் இயக்கும் D43.

D43-combo-cinemapettai

D43-combo-cinemapettai

வெறும் ஒரு மாதம் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ள நிலையில் ஜூலை மாதம் இந்த படத்தை முடித்துக் கொடுக்கிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

அது மட்டுமில்லாமல் இன்னும் பல படங்கள் தனுஷ் நடிப்பில் உருவாக காத்துக்கொண்டிருக்கின்றன. D43 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதால் நேராக அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத்துக்கு வந்துள்ளார் தனுஷ்.

dhanush-recent-photo

dhanush-recent-photo

விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய தனுஷின் புகைப்படங்கள் தான் தற்போது இணையதளங்களில் செம வைரல் ஆகியுள்ளது. முன்னரை விட தனுஷ் தற்போது ஸ்டைலாக உடை அணிய ஆரம்பித்து விட்டார் என அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Continue Reading
To Top