தனுஷ் தற்போது பல படங்களில் பிஸியாக இயங்கி வருகிறார். இதில் பிரபுசாலமனின் ‘தொடரி’ படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. கௌதம் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்திற்கான திரைக்கதை வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேபோல் ‘மாரி 2’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளும் பிஸியாக நடந்து வருவதாக இயக்குனர் பாலாஜி மோகன் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், ஆர்.எஸ்.துரைசெந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கொடி’ படத்தைப் பற்றிய முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

அதிகம் படித்தவை:  வி.ஐ.பி 2 டீசர் வெளிவந்தது.! புது மியூசிக் புது டயலாக்..

பொலிடிக்கல் த்ரில்லராக உருவாகும் ‘கொடி’ படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் எனவும், அதில் அரசியல்வாதியான அண்ணனுக்கு ஜோடியாக த்ரிஷாவும், தம்பிக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரனும் நடிக்கிறார்கள் என ஏற்கெனவே தகவல் வெளிவந்திருக்கின்றன. தற்போது, படத்தின் கதை எதை அடிப்படையாகக் கொண்டது என்றொரு தகவல் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து கிடைத்திருக்கிறது. ஒரு கிராமத்தில் துவங்கப்படும் அணு ஆலைகளால் அந்த ஏரியாவாசிகள் எத்தகைய பாதிப்பகளைச் சந்திக்கிறார்கள் என்பதை மையமாக வைத்தே இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.நீண்டநாட்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட ‘கொடி’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது துரிதமடைந்துள்ளன.