தனுஷ் தற்போது துரை.செந்தில்குமார் இயக்கும் ‘கொடி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா, ஷாமிலி ஆகியோர் நடிக்கின்றனர். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பொள்ளாச்சி, பழனி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இரவு-பகலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை ரம்ஜான் தேதியில் வெளியிடப் போவதாக சினிமா வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விசிறி வீடியோ பாடல்.!

ஏற்கெனவே, ரம்ஜான் தினத்தில் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. எனவே, இந்த படத்தையும் ரம்ஜான் தினத்தில் வெளியிட்டால் நல்ல வரவேற்பு இருக்கும் சென்டிமெண்டாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  தீபாவளி வாழ்த்துக்களுடன் வெளியானது மாரி 2, செகண்ட் லுக் போஸ்டர்.

இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கியுள்ள புதிய படம் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், அடுத்த படத்துக்கு ரிலீஸ் தேதி அறிவித்திருப்பது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.