Connect with us
boomerang-movie

முதல் முறையாக இப்படி ஒரு கேரக்டரில் தனுஷ் – கொடி பல சுவாரசிய தகவல்கள்

முதல் முறையாக இப்படி ஒரு கேரக்டரில் தனுஷ் – கொடி பல சுவாரசிய தகவல்கள்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கொடி. இந்த படத்தில் தனுஷ் அண்ணன்-தம்பி என இரண்டு விதமான வேடங்களில் நடித்திருப்பதாகத்தான் இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அந்தப்பட யூனிட்டை நெருங்கி விசாரித்தபோது, கொடியில் தனுஷ் அப்பா-மகனாக நடித்திருப்பதாக சொல்கிறார்கள். கதைப்படி அப்பாவாக நடிக்கும் தனுசுக்கு மகன் தனுஷ் பிறப்பது போன்ற காட்சிகளும் படத்தில் உள்ளதாம். ஆக, சின்ன தனுஷ் வளர்ந்து பெரிய பையனாகும்போது அப்பா தனுஷ் வயதான கெட்டப் புக்கு போய் விடுவாராம்.

அந்தவகையில், இரண்டு விதமான கேரக்டர்களுக்குமிடையே எந்தவித சாயலும் இல்லாத ஒரு மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்துள்ளாராம் தனுஷ். முக்கியமாக, அரசியல்வாதி கெட்டப்பில் கதர் வேஷ்டி- கதர் சட்டையில் அசத்தியிருக்குகிறாராம். தனுஷின் காட்பாதராக நடித்துள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் படத்தில் குறைவான காட்சிகளில் வந்தாலும் கலக்கல் செய்திருக்கிறாராம். அவரும், தனுசும் இடம் பெறும் காட்சிகளில் நிகழ்கால அரசியலை ஆங்காங்கே அட்டாக் செய்கிறார்களாம். அந்த காட்சிகள் தியேட்டர்களில் ரசிகர்களிடம் பெரிய அளவில் கைதட்டல் பெறும் என்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top