Connect with us

Cinemapettai

D43: தனுஷ்-கார்த்திக் நரேன் கூட்டணியில் இணையும் பிரபல நடிகை.. காட்டிய கவர்ச்சியில் ஏடாகூடமாக மாட்டிய தனுஷ்!

dhanush-karthik-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

D43: தனுஷ்-கார்த்திக் நரேன் கூட்டணியில் இணையும் பிரபல நடிகை.. காட்டிய கவர்ச்சியில் ஏடாகூடமாக மாட்டிய தனுஷ்!

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் கைவசம் அதிகம் படங்கள் வைத்துள்ள ஹீரோ என்றால் அது தனுஷ் தான். தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன். கர்ணன் படத்தில் இன்னும் 5 சதவிகித காட்சிகள் மட்டும்தான் பாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் D43 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாபியா பட தோல்வியால் கார்த்திக் நரேன் இந்த படத்தின் கதையில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக மலையாளத்தில் வைரஸ் என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனரை கூட்டு சேர்த்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக தனுசுக்கு கதாநாயகி யார் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் அவரது பிறந்த நாளில் அந்த நாயகியே சூசகமாக தெரிவித்துவிட்டார்.

malavika-mohanan-cinemapettai

malavika-mohanan-cinemapettai

தனுஷ் கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு மாளவிகா மோகனன் தான் அடுத்த நாயகி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அம்மணி காட்டிய கவர்ச்சியில் ஏடாகூடமாக மாட்டிக்கொண்டார் தனுஷ் என இப்போதே கோலிவுட் வட்டாரங்களில் கிண்டல் அடிக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top