Tamil Cinema News | சினிமா செய்திகள்
படக்குழுவுக்குகே தெரியாமல் சஸ்பென்ஸை உடைத்த தனுஷின் ‘கர்ணன்’ பட நாயகி.. திட்டி தீர்க்கும் விசுவாசிகள்
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி அதன் பின் தனது பன்முகத் திறமையினால், பாலிவுட்டில் கதாநாயகனாக நடிக்கும் அளவுக்கு புகழின் உச்சத்தை அடைந்தவர் நடிகர் தனுஷ்.
இவர் தனது அடுத்த படமாக கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்கும் மாரி செல்வராஜ், தனது படங்களில் சமுதாயத்தில் நிலவி வரும் சீரியஸான விஷயத்தை ரொம்ப ஜாலியா மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வித்தைக்காரர்.
பெரிய பெரிய இயக்குனர்களே கையில் எடுக்க தயங்கும் சமூக ஏற்றத்தாழ்வு நிறைந்த கதைக்களத்தை, ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் பாமர மக்களை உசுப்பிவிட்டவர்.
இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியாக தான் தற்போது கர்ணன் படத்தில் தனுஷ்யை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப்படத்திலும் 1991ஆம் ஆண்டு கொடியின் குளத்தில் ஏற்பட்ட கலவரத்தை பத்தி மக்களுக்கு வெளிச்சம் போட்டு காமிக்கிறதுக்காகவே இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் ஒருசில பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரஜிஷா விஜயன் படக்குழுவினருக்குகே தெரியாமல், சூட்டிங் ஸ்பாட்டில் தனுஷ் தான் நடித்த காட்சியை சீரியஸா படக்குழுவினருடன் சேர்ந்து பார்த்துகொண்டு இருக்கும், ஒரு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்திள்ளார்.

dhanush-cinemapettai
மலையாள நடிகையான ரஜிஷா விஜயன், தமிழ் சினிமாவிற்கு கர்ணன் படத்தின் மூலம் தான் என்ட்ரி ஆனதால், தனுஷ் போட்டோவை அப்லோட் செய்து அவரோட ரசிகர்களின் தலைவியாக மாறி விட்டார்.
