சுதந்திர தினத்திற்கு ஜீ தமிழில் ஒளிபரப்ப உள்ள தனுஷின் சூப்பர் ஹிட் படம்.. குதூகலத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் தனுஷ் வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் கர்ணன். இப்படம் சமுதாயத்தில் வாழும் மக்களின் அடக்குமுறையை கூறினர். அதாவது தன் பகுதியில் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகளை எதிர்க்கும் அதிகாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். ராணுவத்தில் சேர துடிக்கும் இளைஞன் அதிகாரிகளால் இன்னல் படுவதையும் எடுத்துக்காட்டியது.

மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா எனும் படம் 75வது சுதந்திர தினத்தையொட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளனர். இப்படத்தில் அல்லு அர்ஜுன் தன் இந்தியாவிற்காக போராடுவதே லட்சியமாகக் கொண்டுள்ள ஒரு ராணுவ வீரரின் கதையாக உருவாக்கப்பட்டது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Allu Arjun

தற்போது தொலைக்காட்சிகளில் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்களை ஒளிபரப்பினால் மட்டுமே அந்த தொலைக்காட்சியை பார்ப்பார்கள். அதனால் தற்போது பல தொலைக்காட்சிகளிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படங்களை வாங்கிய ஒளிபரப்பி வருகின்றனர்.தற்போது ஜீதமிழ் பல புதிய படங்களை ஒளிபரப்ப உள்ளது.

இந்த 2 திரைப்படங்களும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்த 2 திரைப்படங்களையும் சுதந்திர தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளையும் மக்களுக்காக ஒளிபரப்ப உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்