தம்பி படம் ஆடுகளம் மாதிரி இருக்கணும்.. இளம் இயக்குனருக்கு வாய்ப்புக் கொடுத்த தனுஷ்

தனுஷ் சமீபகாலமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் என்ன செய்கிறார்களோ அதையே கடைப்பிடிக்க தொடங்கியுள்ளார் தனுஷ்.

ஏன் அவரது மாமனார் கூட அப்படித்தான். காலத்திற்கேற்றவாறு இயக்குனர்களை மாற்றியதால் தான் 40 வருடமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதை தனுஷ் இன்னமும் உணராமல் இல்லை.

தனுஷ் தற்போது அவருடைய உச்சகட்ட மார்க்கெட் நிலவரத்தை இருப்பதால் அவர் தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்தாக வேண்டிய நிலைமை. அப்படி கொடுத்தால் இன்னும் சில வருடங்களில் பெரிய வசூல் நாயகனாக மாறி விடுவார்.

அதற்கு தகுந்த மாதிரி வித்தியாச வித்தியாசமான படங்களை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அப்படித்தான் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய ராம்குமாருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

வாய்ப்பு கொடுத்து மூன்று வருடமாகியும் இன்னும் கதை முழுமையாக வெளியாகவில்லை என தனுசை அப்டேட்டாக்கிக் கொண்டிருக்கிறார் ராம்குமார். இதனால் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் கொடுத்த தேதியை வேஸ்ட் செய்ய வேண்டாம் என இளம் இயக்குனர் இளன் என்பவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளாராம் தனுஷ்.

இவர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்கியவர். தற்போது தனுஷை வைத்து எடுக்கும் படம் முழுக்க முழுக்க மதுரையில் கிராமத்து கதையம்சத்தில் உருவாகியுள்ள திரைப்படம். மேலும் ஆடுகளம் மாதிரி ஒரு மாஸ் படமாக இருக்கட்டும் என இளம் இயக்குநருக்கு தெம்பூட்டிள்ளார் தனுஷ். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

dhanush-elan-cinemapettai
dhanush-elan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்