Connect with us
Cinemapettai

Cinemapettai

அவெஞ்சர்ஸ் கூட்டணியில் இணைந்த தனுஷ்.. கேப்டன் அமெரிக்காவுடன் கெத்தாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

dhanush-avengers

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அவெஞ்சர்ஸ் கூட்டணியில் இணைந்த தனுஷ்.. கேப்டன் அமெரிக்காவுடன் கெத்தாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியில் தடம்பதித்து அதிலும் வெற்றி பெற்று தொடர்ந்து ஹாலிவுட்டில் ஏற்கனவே தடம் பதித்து வெற்றியும் பார்த்துவிட்டார் தனுஷ். அந்த வகையில் அவரைப் பொருத்தவரை இந்த புதிய ஹாலிவுட் அறிவிப்பு சாதாரணமாகத்தான் இருக்கும்.

ஆனால் ரசிகர்கள் சும்மா விடுவார்களா. அதுவும் உலக அளவில் வசூல் வேட்டையாடும் அவெஞ்சர்ஸ் பட கூட்டணியில் தனுஷின் இணைந்தால் அதை உலக அளவில் கொண்டாடி விடுவார்கள் அல்லவா. அது தான் தற்போது சமூக வலைதளங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை இயக்கிய ரஸ்ஸோ பிரதர்ஸ், உலகளவில் பிரபலமான நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம் இயக்க உள்ளனர். தே கிரே மேன் என்ற படத்தில் அவெஞ்சர்ஸ் கேப்டன் அமெரிக்கா புகழ் கிரிஸ்டோபர் ராபர்ட் ஈவன்ஸ் என்பவருடன் சேர்ந்து தனுஷ் நடிக்க உள்ளாராம்.

இதனை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் பெருமைப்படும் விதமாக சமூக வலைதளங்களில் டிரென்ட் செய்து வருகின்றனர்.

தனுஷுடன் சேர்ந்து பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த படத்தில் ஒன்று சேர்ந்துள்ளதால் த கேரி மேன் படத்திற்கு உலகளவில் இப்போதே எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

dhanush-the-gary-man

dhanush-the-gray-man

இவ்வளவு பெரிய அறிவிப்பு வெளிவந்தும் தனுஷ்எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அமைதியாகவே உள்ளார். தனுஷ் ஏற்கனவே ஹாலிவுட்டில் தே எக்ஸ்ட்ரார்டினரி ஜெர்னி ஆஃப் த பகிர் என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top