ஜகமே தந்திரம் படத்தின் கதை இதுதானாம்- அட வட சென்னை மாதிரியே இருக்கே

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எ வை நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ஜகமே தந்திரம். கொரானா தொற்று காரணமாக திரை அரங்க ரிலீஸை தவிர்த்து நெட் பிலிக்சிடம் படத்தை விற்றுவிட்டனர்.  இதோ, அதோ என படத்தை ரிலீஸ் செய்த பாடில்லை. படம் தியேட்டர் ரிலீஸ் ஆகாதது தனுஷுக்கு பெரிய வருத்தம் தான் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ (கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் லார்ட் கமாண்டர் ஜியோர் மோர்மோன்ட் ரோலில் நடித்து அசத்தியவர்) சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், அஸ்வத் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் கதை சுருக்கம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இதனை படிக்கும் பொழுதும், கூடவே, போஸ்டர்கள், டீசரையும் பார்க்கும் நமக்கு கிட்டத்தட்ட படத்தின் கதை இது தான் என தெரிகிறது.

dhanush jagame thanthiram story

சுருளி தனது ஹோட்டல் கடையில் சிறப்பாக வேலை செய்து வருகிறார். ஒரு நாள் அங்கு நடக்கும் அக்கரம செயலை தட்டி கேட்க ஒரே ராத்திரியில் பிரபலமாகிறார். ரௌடியாக பார்ம் ஆகிறார்.

அதேநேரத்தில் லண்டனில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ இருவர் கேங்குக்கும் சண்டை நடந்த வண்ணம் உள்ளது. எனவே இதனை முடிவு கட்ட ஜோஜு ஜார்ஜ் தனது ஆட்களிடம் சொல்லி பல நாடுகளில் இருந்து கை தேர்ந்த ரௌடிகளை தேர்ந்தெடுத்து அழைத்து வருமாறு சொல்கிறார். இதன் காரணமாகவே தனுஷ் வெளிநாடு செல்கிறார்.

அங்கு சென்ற சில நாட்களில் தன் டீம் பக்கம் தவறுகள் இருக்கு, எதிர்தரப்பே சரி என்பதை உணர்ந்து உண்மை நிலவரம் அறிய வர வில்லன் டு ஹீரோ அவதாரம் எடுக்கிறார். அனைத்து டான்களையும் அழித்து முடிசூடா மன்னன் ஆகிறார்.

இப்படி தான் இருக்கும் என்பது எங்களின் யூகம். காத்திருப்போம் படத்தின் ரிலீசுக்காக. ரகிடா .. ரகிடா … ரகிடா !!!