Connect with us

Cinemapettai

ஜகமே தந்திரம் கதையை வெளியிட்டு விட்டு அவசரமாக நீக்கிய நெட் பிலிக்ஸ்.. இதோ ஸ்க்ரீன் ஷாட்!

dhanush-jagame-thanthiram-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் கதையை வெளியிட்டு விட்டு அவசரமாக நீக்கிய நெட் பிலிக்ஸ்.. இதோ ஸ்க்ரீன் ஷாட்!

ஜூன் 18 தனுஷின் ஜகமே தந்திரம் நெட் பிலிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகிறது. அதனை முன்னிட்டு ஜூன் 1 ட்ரைலர் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா – இந்த வசனமே படத்தின் கதையை சொல்லிவிட்டது. தனுஷுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், அஸ்வத் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கதை சுருக்கம் என யூ ட்யூப் ட்ரைலருடன் கிட்டத்தட்ட முழு கதையையும் சொல்லிவிட்டனர் netflix.

சர வெடியோட சுருளி ரெடி! மதுரை தாதா சுருளியை லண்டனை சேர்ந்த அரசியல் பின்புலன் உள்ள தலைவன் பீட்டர் தனது க்ரூப்பில் சேர்கிறான். எதிர் தரப்பான சிவதாஸ் கும்பலின் உள்ளே புகுந்து அவர்கள் எவ்வாறு கள்ள மார்க்கெட்டில் ஆயுதங்கள், தங்கம் கடத்தல் செய்கிறார்கள் என்ற செயல்முறைகளை கண்டு சொல்வதே சுருளியின் வேலை. எனவே படத்தின் கதை இந்த மூன்று நபர்கள் ஒரே பிரச்சனையை தங்கள் கோணத்தில் பார்த்து அணுகுகிறார்கள் என்பதே. அப்பெடியெனில் இந்த இருவரையும் டபிள் க்ராஸ் செய்து தனுஷ் லண்டன் தாதா ஆவதே கதை.

dhanush jagame thanthiram story from youtube

இது வெளிநாட்டு டிஜிட்டல் ரசிகர்களுக்காக பகிரப்பட்டால் அது ஓகே,  நம் தமிழகத்தில் இப்படி கதையை பதிவிடுவது தவறு என மார்க்கெட்டிங் டீம் உணர்ந்த பின்பு , உடனே மாற்றி விட்டனர்.

jagame thanthiram edited story

இப்படத்தின் கதை சுருளி என்கிற மதுரை தாதா ஒரு யுத்தத்தில் நன்மை அல்லது தீமை எந்த பக்கம் நிற்கிறான் என்பதே என திருத்தி விட்டனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top