தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

இந்நிலையில் மேலும் ஒரு நடிகை இந்த படத்தில் இணைந்துள்ளார். அது நடிகை சுனைனா தான். இவர் கடைசியாக விஜய் நடித்த தெறி படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதிகம் படித்தவை:  மூட நம்பிக்கைக்காக இப்படியா ? அதுவும் பிணத்துடன்!

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் அவருக்கு கொஞ்சம் அதிகம் நீடிக்கப்பட்ட கேமியோ ரோல் என கூறப்படுகிறது. மும்பையில் நடந்த படப்பிடிப்பில் சுனைனா ஏற்கனவே தன் பகுதிகளை நடித்து முடித்துவிட்டாராம்.