Connect with us

Cinemapettai

கார்த்திக் நரேனுக்கு அவசரப்பட்டு சான்ஸ் கொடுத்துடமோ? மாஃபியாவால் கலக்கத்தில் தனுஷ்

karthik-dhanush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கார்த்திக் நரேனுக்கு அவசரப்பட்டு சான்ஸ் கொடுத்துடமோ? மாஃபியாவால் கலக்கத்தில் தனுஷ்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாபியா. கடந்த வெள்ளியன்று வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் இரண்டு நாளில் இருந்த வசூல் தற்போது குறைந்துவிட்டதாக தெரிகிறது.

அருண் விஜய்யை பொருத்தவரை மாபியா படத்தில் எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் ப்ரியா பவானி சங்கர் தேர்வில் தான் முதல் சொதப்பல் ஆரம்பித்துள்ளது. அதனை தொடர்ந்து 45 நிமிட படத்திற்கு தேவையில்லாமல் slow-motion காட்சிகளை வைத்து இரண்டு மணி நேரம் உருவாக்கியது தான் மிகப்பெரிய தவறு.

ஒரே பாகமாக முடிக்கவேண்டிய திரைப்படத்தை ஜவ்வாக இழுத்து இரண்டு பாகத்திற்கு கொண்டு சென்றதன் விளைவு மாபியா தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படம் இயக்க போவதாக செய்திகள் வெளியானது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மாபியா படத்தின் ரிசல்ட்டை பார்த்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க தனுஷ் பின்வாங்குவதாக தெரிகிறது.

இருந்தும் கார்த்திக் நரேன் அடுத்தமுறை திரைக்கதையில் இந்த தவறை செய்ய மாட்டார் என்ற அரைகுறை நம்பிக்கையில் தனுஷ் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேக்கிங் வீடியோவை படமா ரிலீஸ் பண்ண முதல்ஆள் நீங்கதான் கார்த்திக் நரேன்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top