தோல்வி படத்தை கையில் எடுக்கும் தனுஷ்.. அரசியலுக்கு போடும் அஸ்திவாரம்

தனுஷின் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொள்ளாத ஆட்களே இல்லை. ஆரம்பத்தில் இந்த மூஞ்சி எல்லாம் சினிமால நடிக்க வந்துட்டா என கேட்டவர்கள் மத்தியில் தற்போது இவரது கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் காத்துக் கிடக்கின்றனர். ஏனென்றால் தனுஷ் கோலிவுட் மட்டும் அல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என தன்னுடைய அசுர நடிப்பால் உலக சினிமாவையே மிரள வைத்துள்ளார்.

ஆனால் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் தனுஷ் மீண்டும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் புதுப்பேட்டை.

இப்படம் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான கொடி படமும் அரசியல் சம்பந்தமான படம் தான். இந்நிலையில் மீண்டும் வலுவான அரசியல் கதை கொண்ட ஒரு படம் தனுஷை தேடி வந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு தெலுங்கில் ராணா டகுபதி நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் லீடர்.

இப்படத்தில் ராணா டகுபதி முதலமைச்சர் அர்ஜுன் பிரசாத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சனரீதியாக வரவேற்பு கிடைத்தாலும், வசூல் ரீதியாக தோல்வியையே சந்தித்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் சேகர் கம்முலா இறங்கியுள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது. மேலும் இப்படத்திற்கான கதை தனுஷிடம் சொல்லப்பட்டுள்ளது. தனுஷ் ஏற்கனவே அரசியல் கதைகளில் நடித்திருந்தாலும், மாநில முதல்வராக நடிக்க சம்மதிப்பாரா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் இப்படம் திரில்லர் கலந்த அரசியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர், நடிகைகளை உறுதி செய்த பின்பு படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்