ரஜினியின் பாதிப்பில்லாமல் ஒருவராலும் நடிக்க முடியாது. அந்தளவுக்கு இளம் ஹீரோக்களின் அணுக்களில் எல்லாம் ரஜினியின் ஸ்டைல் ஏதொவொரு வடிவத்திலாவது குடி கொண்டிருக்கும். நான்தான் அடுத்த ரஜினி என்று ஆசைப்பட்ட நடிகர்கள் கூட, கலெக்ஷன் விஷயத்தில் அவரது படத்தை கிராஸ் பண்ணியதில்லை. இப்போதும் இளைக்காத குதிரையாக ஓட்டமெடுக்கும் ரஜினியின் நிஜ வாரிசு யார்? சினிமா வாரிசு யார்? என்ற குழப்பம் நீடித்துக் கொண்டேயிருக்கிறது.

நடுவில் சிம்பு கூட அந்த போட்டியில் இருந்தார். அந்த போட்டியிலிருந்து அவரே விலகியதெல்லாம் நாடறிந்த விஷயம்தான். எங்கிருந்தோ சடக்கென ரஜினி குடும்பத்தில் ஐக்கியமான தனுஷ், இன்னமும் மருமகன் மிடுக்கை விட்டுக் கொடுக்காமல், நான்தான் அடுத்த ரஜினி என்று அலட்டிக் கொள்ளாமலும் இருப்பதால், மாமனார் குடும்பத்தின் மதிப்புக்குரிய மருமகனாகவே இருக்கிறார்.

அதுதான் அவரை ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்கிற அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. காலா படம் மிக சரியான ஸ்கெட்ச் போடப்பட்டு உருவாகி வருவதால், நிச்சயம் சொல்லி அடிக்கும் ஹிட்டாக இருக்கும். இந்த சுச்சுவேஷனில்தான் அந்த நல்ல செய்தி.

படத்தில் ரஜினியின் சிறுவயது கேரக்டர் ஒன்று வரப்போகிறதாம். அந்த இளைஞன் கேரக்டரில் ரஜினியாக நடிக்கப் போகிறார் தனுஷ். நான்தான் நிஜமான வாரிசு என்பதை சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்ல நினைத்தாரோ என்னவோ?

எப்படியிருந்தாலும் வெல்டன் தனுஷ். வெல்க தனுஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here