Connect with us
Cinemapettai

Cinemapettai

vadachennai-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வடசென்னை படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? வெற்றிமாறன் மீது அதிருப்தியில் ரசிகர்கள்

2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படம் மாபெரும் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

படம் அருமையாக இருந்தாலும் வசனங்கள் முழுவதும் கெட்ட வார்த்தையில் அமைந்ததால் இந்த படத்தின் மீது சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டது.

இருந்தாலும் இந்த படம் பாக்ஸ் ஆபிசில் பட்டையைக் கிளப்பியது. தனுஷ் சினிமா கேரியரில் இந்த படம் ஒரு மைல்கல் என்பதும் மறுக்க முடியாது.

இந்நிலையில் வடசென்னை படம் பிரபல ஹாலிவுட் படம் ஒன்றின் தழுவல் என்பது தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு படங்களின் கதைக்கருவும் ஒத்துப்போவதால் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

a-prophet

a-prophet

2009 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான திரைப்படம் ஏ ப்ராபெட். இந்த படத்திலும் ஜெயிலுக்குள் இரண்டு கேங்குகள் அடித்துக் கொள்வதை போலவும், அவர்களில் ஒருவருக்கு ஹீரோ சப்போர்ட் செய்வதைப் போலவும் கதை அமைந்து இருக்கும்.

அதே கதைக்கருதான் வடசென்னை படத்திலும். நீண்ட நாள் கழித்து வடசென்னை படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என செய்திகள் உலா வரத் தொடங்கியுள்ளது. ஆனால் வெற்றிமாறன் அதற்கெல்லாம் அசராமல் விரைவில் வடசென்னை2 உருவாகும் என தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top