Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-thiruchitrambalam-review

Reviews | விமர்சனங்கள்

Thiruchitrambalam Review – திருச்சிற்றம்பலம் தனுஷ்க்கு வெற்றியா.? தோல்வியா.? சினிமா பேட்டை ஒரு அலசல்

இயக்குனர் மித்ரன் ஜவஹருடன் நான்காவது முறையாக தனுஷ் இணைந்துள்ள படமே திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, அனிருத் இசை, ரெட் ஜெயண்ட் வெளியீடு என அனைத்துமே ஹிட் காம்போ தான். யதார்த்த சினிமா, நம் அக்கம் பக்கம் நடக்கும் சம்பவங்களின் கோர்வை என கூட இப்படத்தை சொல்லலாம்.

ஒரே வீட்டில் தாத்தாவாக பாரதிராஜா, அப்பாவாக பிரகாஷ் ராஜ், மகனாக தனுஷ் என மூவரும் நடிப்பில் அசத்தி உள்ளனர். நீ நான் என்று பிரேமுக்கு பிரேம் மிரட்டல் தான். பாரதிராஜாவின் டைமிங் கிண்டல், பிரகாஷ்ராஜின் எமோஷனல் ஆங்கில் மற்றும் தனுஷின் விரகத்தி என இந்த மூன்றும் தான் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

Also Read: மத்தளம் போல் அடிமேல் அடிவாங்கும் தனுஷ்.. ரகசியமாய் வெற்றிமாறனுக்கு போட்ட போன் கால்

படத்தில் அதிகம் கவர்வது தனுஷ் மற்றும் நித்யா மேனனின் நடிப்பு. தனுஷுக்கு நிகர் என சொல்வதனை விட ஒரு படி மேலே சென்றுவிட்டார் நித்யா மேனன் தன் நடிப்பில். இவர்களது கெமிஸ்ட்ரி மற்றும் காட்சிகள் பல இடங்களில் நமக்கு பத்ரி-  விஜய் மற்றும் பூமிக்காவை நினைவு படுத்துகிறது.

ராசி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் இருவருக்கும் சின்ன ரோல் தான், ஆனால் கனகச்சிதமாக பொருந்தியுள்ளனர். இருவருமே சூப்பர் க்யூட் தான். “மேகம் கருக்குதா” பாடலின் மேக்கிங் ஸ்டைலிஷ், “தாய் கிழவி” பாட்டுக்கு அரங்கமே அதிர்கிறது.

Also Read: எக்ஸ் மாமனாரால் விலகி இருந்த தனுஷ்.. 4 வருடம் கழித்து சுள்ளான் சூடாகி எடுத்த முடிவு

குறைந்த பட்ஜெட், பழைய கதை தான், திரைக்கதையும் புதுசாக இல்லை எனினும் இந்த திருச்சிற்றம்பலம் என்கிற “பழம்” நமக்கு திருப்தியை தான் கொடுக்கிறது. எந்நேரமும் தாத்தாவும் பேரனும் பாட்டிலுடன் இருப்பது நமக்கே சலிப்பை ஏற்படுத்துகிறது, இயக்குனர் அதனை தவிர்த்திருக்கலாம்.

எங்கோ இருப்பதன் பின் சென்று தனக்கு அருகில் இருப்பதை இன்றைய இளசுகள் கண்டுக்கொள்வதில்லை என்பதனை தான் படத்தின் வாயிலாக இயக்குனர் சொல்லியுள்ளார். ஆகமொத்தத்தில் இந்த திருச்சிற்றம்பலம் அணைத்து தரப்புக்கும் நல்ல லாபத்தை பெற்று தந்துவிடுவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சினிமாபேட்டை ரேட்டிங் – 2.5 / 5

Also Read: முழுநேர ஹாலிவுட் ஹீரோவாக செட்டிலாக போகும் தனுஷ்.. முக்கிய அறிவிப்பால் திணறும் கோலிவுட்

Continue Reading
To Top