fbpx
Connect with us

அந்த ஹாலிவுட் படத்துல இருக்கீங்க, ஆனா ஷூட்டிங் எப்போன்னு தெரியாது.. தனுஷுக்கு ஷாக் கொடுத்த படக்குழு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த ஹாலிவுட் படத்துல இருக்கீங்க, ஆனா ஷூட்டிங் எப்போன்னு தெரியாது.. தனுஷுக்கு ஷாக் கொடுத்த படக்குழு

தனுஷ் இரண்டாவது முறையாக நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தற்போதைக்கு இல்லை என்ற செய்தி தனுசை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரிய அளவுக்கு பில்டப் கொடுத்து விட்டோமோ என யோசித்து வருகிறாராம்.

தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சென்ற மிக சொற்ப நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். முன்னொரு காலத்தில் ரஜினிகாந்த் போன்றோர் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ளனர்.

தற்போது தனுஷ், உலகமெங்கும் மார்க்கெட் உள்ள நடிகராக வலம் வருகிறார். இவருடைய அனைத்து படங்களுக்கும் தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் கணிசமான மார்க்கெட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹாலிவுட் அவெஞ்சர்ஸ் புகழ் ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் கேப்டன் அமெரிக்கா புகழ் கிரிஷ் ஈவன்ஸ் என்ற நடிகருடன் சேர்ந்து நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் த கிரே மேன் என்ற படத்தில் நடிக்க இருந்தார்.

the-gray-man-cinemapettai

the-gray-man-cinemapettai

வெகு விரைவில் தொடங்க இருந்த த கிரே மேன் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்க மாகாணத்தில் மீண்டும் கொரானா பரவ ஆரம்பித்ததால் தற்போதைக்கு தேதி குறிப்பிடாமல் அந்த படத்தை ஒத்தி வைத்து விட்டார்களாம். மீண்டும் அந்த படத்தை தொடங்க பல மாதங்கள் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என தயாரிப்பு தரப்பிலிருந்து தனுசுக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

இதைப்பார்த்த மனுஷன் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டாராம். சரி ஹாலிவுட் இல்லை என்றால் என்ன, பாலிவுட் போவோம் என தன்னுடைய அடுத்த பாலிவுட் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

Continue Reading
To Top