fbpx
Connect with us

ரவுடி பேபி பாடல் மூலம் தனுசுக்கு இத்தனை கோடி வருமானம்? ஒரே பாட்டுல ஒரு பட சம்பளம் கிடைச்சிருச்சு!

rowdy-baby-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரவுடி பேபி பாடல் மூலம் தனுசுக்கு இத்தனை கோடி வருமானம்? ஒரே பாட்டுல ஒரு பட சம்பளம் கிடைச்சிருச்சு!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் மாரி.

பெரிய அளவு வசூல் செய்யவில்லை என்றாலும் அந்த படத்தில் தனுஷ் நடித்த மாஸ் காட்சிகள் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த படத்தின் வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஃபேமஸ். இந்நிலையில் மாரி 2 படம் உருவாகி படுதோல்வியை சந்தித்தது.

மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இந்த படத்தையும் பாலாஜி மோகன் தான் இயக்கியிருந்தார். ஆனால் முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத் இதற்கு இசை அமைக்கவில்லை.

அதற்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் சுமாராக இருந்தாலும் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் ரவுடி பேபி பாடல் இணையத்தில் 96 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

rowdy-baby-song

rowdy-baby-song

இதனால் அந்தப் பாடலின் மூலம் வருமானம் மட்டும் யூடியூபில் இருந்து தனுசுக்கு சுமார் 8 கோடி கிடைத்துள்ளதாம். ஒரு படத்தின் சம்பளத்தை ஒரு பாட்டில் வாங்கி விட்டார் என கோலிவுட் வட்டாரமே அவர்மீது பொறாமையில் உள்ளது.

Continue Reading
To Top