fbpx
Connect with us

Cinemapettai

13 வருடங்கள் கழித்து ஹிந்தியில் ரீமேக் ஆகும் தனுஷ் படம்.. வெற்றிமாறன் வேற லெவல்

dhanush-vetrimaran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

13 வருடங்கள் கழித்து ஹிந்தியில் ரீமேக் ஆகும் தனுஷ் படம்.. வெற்றிமாறன் வேற லெவல்

ஒரு காலத்தில் தமிழ் நடிகர்கள்தான் மற்ற மொழித் திரைப்படங்களில் இருந்து ரீமேக் செய்து வந்தனர். ஆனால் தற்போது கதையே வேறு. மற்ற மொழி நடிகர்கள் தமிழ் படங்களை ரீமேக் செய்ய வேண்டிய நிலைமை ஆகிவிட்டது.

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை உடைய திரைப்படங்கள் வரத் தொடங்கியதால் மற்ற மொழி நடிகர்கள் தமிழ் மொழி படங்களை ரீமேக் செய்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது 13 வருடங்களுக்கு முன் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான பொல்லாதவன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.

ஒரே ஒரு பைக்கை மையமாக வைத்து அதனைச் சுற்றி திரைக்கதை அமைத்து அனைவரையும் ரசிக்கும்படி படமாக்கி வெற்றிபெற்றவர் வெற்றிமாறன். இன்றும் அந்தப் படத்தை டிவியில் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். ஜிவி பிரகாஷின் இசை அந்த படத்திற்கு தூணாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. இன்றும் அந்த பைக் மியூசிக் தான் பலரது ரிங்டோன்.

பொல்லாதவன் படத்தை ஹிந்தியில் கன்ஸ் ஆப் பனாரஸ் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். சேக்குர் சூரி இயக்கத்தில் கரன் நாத் என்ற நடிகர் நடிக்க உள்ளார். ஆக்ரோஷமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தனுஷூம் ஹிந்தியில் பிரபல நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

polladhavan remake movie

polladhavan remake movie

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top