Reviews | விமர்சனங்கள்
தனுஷ் ஆடும் ஆட்டம்.. பட்டாஸ் திரைவிமர்சனம்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கதில் தனுஷ், மெஹரீன், நவீன் சந்திரா, சினேகா மற்றும் பலர் நடிப்பில் பொங்கல் முன்னிட்டு வெளியாகி உள்ள படம். அசுரன் போன்ற பவர்புல் படத்தை தொடர்ந்து பக்கா கமெர்ஷியல் ரூட்டில் வெளியாகியுள்ள தனுஷ் படம்.
கதை – வில்லன் நவீன் சந்திராவை கொலை செய்ய வேண்டும் என்ற முடிவில் ஜெயிலில் இருந்து வருகிறார் சினேகா. மறுபுறம் பக்கா சென்னை ப்ரோவாக சின்ன சின்ன திருட்டு செய்து பிழைப்பை நடத்தி வருகிறார் பட்டாஸ் தனுஷ். நவீன் சந்திராவின் அகாடமியில் சந்திக்க, சில பல சீன்களுக்கு பின் அம்மா – மகன் என்பது புரியவருகிறது.
பிளாஷ்பேக்கில் அடிமுறை பற்றிய விளக்கம், அதன் பாரம்பரியம் வில்லன் செய்த சூழ்ச்சி என செல்கிறது திரைக்கதை. அப்பாவின் ஆசையை பூர்த்தி செய்ய அம்மாவின் உந்துதலில் மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டியில் கலந்துகொள்கிறார். இறுதியில் வெற்றியும் பெறுகிறார் நம் ஹீரோ.
சினிமாபேட்டை அலசல் – தமிழ் சினிமாவிற்கு பழக்கப்பட்ட பழி வாங்கும் கதை தான், கூடவே நம் மண் சார்ந்த விஷயம் உள்ள டெம்ப்லேட் படம். எனினும் நமக்கு சலிப்பு ஏற்படுத்தாமல், சுறுசுறுப்பாக திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர். முதல் பாதியில் பட்டாஸ் தனுஷ் சிறப்பென்றால், இரண்டாம் பாதியில் அப்பாவாக திரவிய பெருமாள் கலக்கல்.
பிளஸ் – தனுஷ், சினேகா, பிளாஷ் பேக் சண்டைக்காட்சிகள்
சினிமாபேட்டை வெர்டிக்ட் – தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை மறந்துவிட்டு, VIP, திருவிளையாடல் ஆரம்பம் படங்களை நினைத்துக்கொண்டு சென்றால் முழு திருப்த்தியாக திரும்பி வருவீர்கள். பொங்கல் போன்ற பண்டிகை நாளில் குடும்பத்துடன் சென்று ரசித்து வர ஏற்ற கமெர்ஷியல் கதம்பமே இந்த பட்டாஸ்.
புதிய பேக்கிங், ஆனால் அதே பழைய மசாலா தான்.
சினிமாபேட்டை ரேட்டிங் – 3/5
