Tamil Cinema News | சினிமா செய்திகள்
தலைவர் படம் ரிலீஸ் நாளில் என் படமா? அதற்கு தனுஷ் கூறிய அந்த வார்த்தை
வருகின்ற பொங்கலுக்கு தலைவர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படமும், தனுஷ் நடித்த பட்டாசு திரைப்படமும் ஒருசேர வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் படம் ஆரம்பமாகும் போது இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிவித்து இருந்தனர். ஆனால் தனுஷ் நடிக்கும் பட்டாசு திரைப்படம் சூட்டிங் இழுத்துக் கொண்டே சென்றதால் பல ரிலீஸ் தேதிகள் மாறி வந்தன.
தற்போது படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வருடத் தொடக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த விஸ்வாசம் திரைப்படம் ரஜினியின் பேட்ட படத்துடன் போட்டியிட்டு நல்ல வசூல் பெற்றது.
பட்டாசு திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பதால் மாமனாருடன் மருமகனை மோதவிட்டு பார்க்கலாம் என்ற முடிவில் உள்ளார். ஆனால் இது தெரிந்த தனுஷ், இந்த மாதிரி எதுவும் செய்து பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என தயாரிப்பாளர் தரப்பபை அறிவுறுத்தி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று தர்பார் ரிலீஸாவது உறுதி.
