fbpx
Connect with us

Cinemapettai

தனுஷ் இயக்கும் சரித்திர படம் தமிழ் சினிமாவின் பாகுபலி.. கொடுக்குற காசுக்கு மேல கூவும் பிரபலம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷ் இயக்கும் சரித்திர படம் தமிழ் சினிமாவின் பாகுபலி.. கொடுக்குற காசுக்கு மேல கூவும் பிரபலம்

நடிகர், பாடகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். சமீபகாலமாக தனுஷ் நடிக்கும் படங்கள் பெரியளவில் வசூல் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் இயக்கிய முதல் படமான பவர் பாண்டி சூப்பர் ஹிட் அடித்தது. அதில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் நான் ருத்ரன் எனும் படத்தை ஆரம்பித்தார் தனுஷ். நிகழ்காலம் மற்றும் கடந்த காலம் ஆகிய இரு வெவ்வேறு காலகட்ட கதையை கொண்டு உருவாகி வருகிறது. சத்தமில்லாமல் நிகழ்கால காட்சிகள் மூலம் படம் பிடித்து முடித்து விட்டார் தனுஷ்.

அந்த நிலையில்தான் தேனாண்டாள் பிலிம்ஸ் பண பிரச்சனையில் சிக்கி படம் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது எண்டமால் எனும் நிறுவனத்துடன் சேர்ந்து மீதி படத்தை எடுக்க தயாராகி வருகிறாராம் தனுஷ்.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம் தனது. தளபதி 66 படத்துக்கும் இவர்கள்தான் தயாரிப்பாளர் என்ற செய்தியும் கிடைத்துள்ளது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படம்தான் தமிழ் சினிமாவின் அடுத்த பாகுபலி என புகழாரம் சூட்டியுள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். சமீபகாலமாக தனுஷ் படங்களுக்கு இசையமைத்து வரும் ஷான் ரோல்டன் இசையில் தனுஷ் பெரிதும் பாராட்டி கூறியுள்ளார்.

அதற்கு ஷான் ரோல்டன் தனுஷ் இயக்கும் நான் ருத்ரன் படத்தை அடுத்த பாகுபலி என பாராட்டியது பலரையும் சங்கடமடைய வைத்துள்ளது. ஏன் இது தனுசுக்கே சங்கடமாகத்தான் அமைந்திருக்கும். இருந்தாலும் கொடுக்கிற காசுக்கு மேல கூவ வேண்டாம் என அவருக்கு தடை போட்டு விட்டாராம்.

Continue Reading
To Top