Connect with us
Cinemapettai

Cinemapettai

jagame-thanthiram-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் முறையாக 17 மொழிகளில் வெளியாகும் தனுஷ் படம்.. போடு, மஜா தான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் இருந்தாலும் இந்திய அளவில் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் சொற்பமாகவே உள்ளனர். அதிலும் தனுஷ் மட்டுமே தற்போது அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

தனுஷ் தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் என அனைத்திலும் தொடர்ச்சியாக நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் அடுத்ததாக த கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக ஜூன் மாதம் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் நேரடியாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தனுஷ் எவ்வளவு போராடியும் ஜகமே தந்திரம்(jagame thanthiram) படத்தை தியேட்டருக்கு கொண்டு வர முடியவில்லை. இதன் காரணமாக தற்போது வரை ஜகமே தந்திரம் படத்தின் டீசரை கூட தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறார்.

ஆனால் தயாரிப்பாளரோ லாபம் தான் முக்கியம் என நெட்ப்ளிக்ஸுக்கு கிட்டத்தட்ட 45 கோடிக்கும் மேல் விற்று விட்டார். போட்ட காசை எடுக்க வேண்டும் அல்லவா. இந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனுஷுக்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதை கவனித்து கிட்டத்தட்ட 17 மொழிகளில் ஜகமே தந்திரம் படத்தை டப் செய்து வெளியிட உள்ளதாம்.

இதுவரை ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒரு தமிழ் திரைப்படம் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது தமிழ் சினிமாவுக்கு பெருமையை கொடுத்துள்ளது என தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

jagamethandhiram-cinemapettai

jagamethandhiram-cinemapettai

Continue Reading
To Top