Connect with us
Cinemapettai

Cinemapettai

ஜகமே தந்திரம் படத்தின் கதை இதுதான்.. எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிய நடிகரால் கடுப்பில் தனுஷ்

jagame-thandhiram-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் படத்தின் கதை இதுதான்.. எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிய நடிகரால் கடுப்பில் தனுஷ்

தனுஷ்(Dhanush) நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம்(Jagame Thandhiram). மே 1ம் தேதி வெளியாக இருந்த நிலையில் பட வெளியீடு தள்ளிச் சென்றது.

இந்நிலையில் விரைவில் OTT தளங்களிலும் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். ஆனால் அது எந்த அளவு உண்மை என்பது தற்போது வரை தெரியவில்லை.

ஏற்கனவே படம் வெளியாகவில்லை என்ற கவலையில் இருந்த படக்குழுவினருக்கு மேலும் அதிர்ச்சியைத் தரும் விதமாக ஹாலிவுட் நடிகர் ஒருவர் ஜகமே தந்திரம் படத்தின் கதையை ஓப்பனாக கூறியது படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது.

ஜகமே தந்திரம் படம் ஒரு கேங்க்ஸ்டர் படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் கதை என்னவென்றால், இங்கிலாந்தில் பெரிய கேங்ஸ்டர் தலைவராக வலம் வருபவர் ஜேம்ஸ் காஸ்மோ.

இவருடைய கூட்டத்திற்கு லண்டனில் உள்ள இந்தியர்கள் பலரால் பிரச்சனை ஏற்படுகிறது. போதை மருந்து கடத்தல், ஆயுதங்கள் கடத்துதல் போன்றவற்றில் பல பிரச்சனைகளை இந்திய கேங்க்ஸ்டர்கள் ஒன்றாக சேர்ந்து தொந்தரவு செய்வார்கள்.

அதற்காக இந்தியாவில் பெரிய கேங்ஸ்டராக வலம் வரும் தனுசை வைத்து, மற்ற கேங்ஸ்டர்களை துரத்தி அடிப்பது தான் இந்த படத்தின் கதையாம். இப்படம் மிகவும் சுவாரஸ்யமாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாளாக நாளாக படத்தைப் பற்றிய ஒரு சில விஷயங்கள் தொடர்ந்து வெளிவந்த நிலையில் இருப்பதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த பெண் குயின் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top