Videos | வீடியோக்கள்
தர லோக்கலாக குத்தாட்டம் போட வைக்கும் ரகிட ரகிட பாடல்.. தனுஷின் ஜகமே தந்திரம் பாடல் லிரிக் வீடியோ
தனுஷ்(dhanush) நடிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை வொய் நோட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர்.
தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி செம ஹிட் அடித்தது. இன்று அந்த தீம் மியூசிக்கை பயன்படுத்தி டிக்டாக் செய்யாதவர்களே இல்லை. இந்நிலையில் கடந்த மே 1ஆம் தேதி ஜகமே தந்திரம் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளிவந்திருந்தன.
ஆனால் தற்போது நிலவி வரும் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டது. இதனால் படத்தின் வெளியீடு எப்போது என்பதே தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் எப்போது தியேட்டரில் வெளியாகும் என்று தெரியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
ரகிட ரகிட என தொடங்கும் அந்தப் பாடல் லிரிக் வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
ரகிட ரகிட பாடல் லிரிக் வீடியோ:
