நடிகர் தனுஷ் தங்களது மகன் எனக் கூறி கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மதுரை மேலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராக தனுஷ்க்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து தனுஷ் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராகி உள்ளார்.

கஸ்தூரி ராஜா ஒரு முறை சினிமா பயணத்திற்காக சென்றபோது ஒரு சிறுவன் அனாதையாக நின்று கொண்டு இருந்தாராம். அந்த சிறுவனை தான் அழைத்து வந்து வளா்ப்பு மகனாக வளா்த்தாராம் அவர்தான் நடிகா் தனுஷ் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கதிரேசன்- மீனாட்சி தம்பதியினா் தனுஷ் என்னுடைய மகன் என்று கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாதையாக திரியும் சிறுவன் யாரோ ஒருவரால் வளா்க்கபட்டு, வளா்ந்து பெரியவராக வந்தவுடன் தனது பெத்த தாய் தந்தையரை பார்க்க ஊர் ஊராக அலைவது போல படங்கள் கூட வந்துள்ளது.

எனது மகன்தான் தனுஷ் என்று கூறும் அந்த தம்பதிகளுக்கு, தனுஷ் மகன் இல்லை என்றால் டிஎன்ஏ டெஸ்ட் செய்து நிரூபிக்க வேண்டும்.

இதையடுத்து வயதான அந்த தம்பதிகளை கேவலமாக பேசக்கூடாது என்று தாயுள்ளம் கொண்டவர்கள் கூறிவருகின்றனா்.