புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

என்னுடைய தலை சிறந்த இயக்குனர் இவர்தான் என்ற தனுஷ்.. செல்வராகவன், வெற்றிமாறன் எல்லாம் வேஸ்ட் போல!

நடிகர் தனுஷ் பிரபல இயக்குனரின் பிறந்தநாளை முன்னிட்டு, நான் பணியாற்றிய இயக்குனர்களில் இவர்தான் தலை சிறந்தவர் என ஒரு இளம் இயக்குனரை கை காட்டி உள்ளார். இதனால் ஏற்கனவே தனுஷ் வளர்ச்சியில் பங்கு போட்ட இயக்குனர்களை தனுஷ் கண்டுகொள்ளவில்லை என்பது போன்ற பேச்சுக்கள் கோலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவை உலகுக்கு எடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் தனுஷ். தன்னுடைய அபார நடிப்புத் திறமையால் பாலிவுட்டுக்கு சென்று பின்னர் ஹாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தற்போது பாலிவுட்டில் இரண்டாவது படம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தமிழில் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் இரண்டு படங்கள் ரெடியாகி வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன. அதில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஆனால் அதற்கு முன்பே வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் மே 1ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

தனுஷ் கார்த்திக் சுப்புராஜின் பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் பணியாற்றி இயக்குனர்களில் தலைசிறந்தவர் கார்த்திக் சுப்புராஜ் தான் என குறிப்பிட்டுள்ளார். இத்தனைக்கும் இருவரும் இணைந்து ஜகமே தந்திரம் என்ற ஒற்றை படம் தான் எடுத்துள்ளனர்.

dhanush-karthik-subbaraj
dhanush-karthik-subbaraj

தனுஷ் எனக்கு பிடிக்கும் என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால் தலைசிறந்தவர் என்று சொன்னதுதான் தனுஷை வைத்து ஏற்கனவே பல வெற்றிப்படங்களை கொடுத்து இந்த உயரத்திற்கு தனுஷ் வர உறுதுணையாக இருந்த செல்வராகவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Trending News