இரட்டை வேடத்தில் சைக்கோ தாண்டவம் ஆடிய தனுஷ்.. நானே வருவேன் முழு விமர்சனம்

தனுஷ் – செல்வராகவன் கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்த ப்ராஜெக்ட். கலைப்புலி தாணு தயாரிப்பில் அதிக விளம்பரம் இன்றி பொன்னியின் செல்வன் படத்துடன் இணைந்து ரிலீஸ் ஆகியுள்ளது நானே வருவேன். அதீத பட்ஜெட் கிடையாது கதை, திரைக்கதை மற்றும் தனுஷின் நடிப்பை நம்பி மட்டுமே எடுக்கப்பட்டுள்ள படம். இப்படம் ஹாரர் ப்ளஸ் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது.

கதை: சிறுவயதில் இரட்டையர்களில் ஒருவன் முரண்டு பண்ணுவதை கண்டு பயப்படுகின்றனர் பெற்றோர். ஒருவனை கோவிலில் தொலைத்துவிட்டு, மற்றவனுடன் வீடு வருகிறார் அம்மா.

Also Read: வசூல் மழையில் நனைந்த நானே வருவேன் தயாரிப்பாளர்.. மீண்டும் இணையும் தனுஷ்-செல்வராகவன் கூட்டணி

இந்நாளில் பிரபுவாக தனுஷ். மனைவி மற்றும் மகளுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார். தீடீரென மகளின் போக்கில் வித்தியாசத்தை உணர்கிறார். சோனு என்ற அமானுஷ்ய சிறுவன் பற்றி தெரிய வருகிறது. அந்த சிறுவன் சொல்லும் கதையில் தனது அண்ணன் தனுஷ் (கதிர்) பற்றி தெரிவருகிறது.

சிறுவன் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற தனது மகளுடன் செல்கிறான் பிரபு. அங்கு இரண்டு தனுஷ் நேருக்கு நேர் மோத சிறிய ட்விஸ்டுடன் முடிகிறது படம்.

Also Read: நானே வருவேன் படத்தை கண்டிப்பாக பார்க்க 5 காரணங்கள்.. தனுஷ் செய்யப் போகும் சம்பவம்

சினிமாபேட்டை அலசல்: படத்தின் முதல் சில நிமிடங்கள் நமக்கு ஆளவந்தான் படத்தையே நினைவுக்கு கொண்டு வருகிறது. பின்னர் தான் திரைக்கதையில் செல்வாவின் ஸ்டைல் தெரியவருகிறது. தனுஷ் என்ற நடிகனை ரசிக்க ஏற்ற படம். பேமிலி மேன் பிரபு கதாபாத்திரம் நாம் தனுஷ் நடித்து பார்த்த ஸ்டைல் தான், எனினும் வேட்டைக்காரன் கதிர் கதாபாத்திரம் நமக்கு காதல் கொன்டேன் தனுஷை நினைவு படுத்துகிறது.

யுவனின் இசை ப்ளஸ், ஒளிப்பதிவு சூப்பர். திரைக்கதையில் அதிக பரபரப்பை கூட்டாமல் யதார்த்தமாக எடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர். இப்படம் கமெர்ஷியல் சினிமா விரும்பும்  ரசிகர்களுக்கு சின்ன ஏமாற்றம் தான். மல்ட்டிப்ளக்ஸ் ரசிகர்களை இப்படம் அதிகம் கவரும்.

Also Read: இனிமேல் வருவது எல்லாம் லாபம் தான்.. நானே வருவேன் செய்த வசூல் சாதனை

சினிமாபேட்டை வெர்டிக்ட்: செல்வா – தனுஷ் கூட்டணி என அதிக எதிர்பார்ப்பு வைக்காமல் சென்று படத்தை பார்க்கும் பட்சத்தில் கட்டாயம் பிடிக்கும்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 3 / 5