fbpx
Connect with us

Cinemapettai

6 வருடங்களுக்கு பிறகு தனுஷூடன் கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்.. வேற வழி தெரியல ஆத்தா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

6 வருடங்களுக்கு பிறகு தனுஷூடன் கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்.. வேற வழி தெரியல ஆத்தா!

தனுஷ் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்கள் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவரும் புதுப்புது இசையமைப்பாளர்களுடன் கூட்டணி சேர்ந்தாலும் எதுவும் சரியாக அமையவில்லை.

சமீபத்தில் தனுஷ் படங்களில் வந்த வெற்றிப் பாடல் என்று பார்த்தால் அது ரவுடி பேபி பாடல் தான்.

யூடியூப்பில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது அந்த பாடல். இது ஒருபுறமிருக்க தனுஷின் D44 படத்திற்காக தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளருடன் கூட்டணி சேர உள்ளாராம்.

dhanush-cinemapettai

dhanush-cinemapettai

அவர் வேறு யாரும் இல்லை. நம்ம அனிருத் தான். அனிருத் மற்றும் தனுஷ் கூட்டணியில் கடைசியாக உருவான திரைப்படம் மாரி.

மாரி படத்தின் பாடல்கள் எந்த அளவுக்கு சூப்பர் ஹிட் அடித்தது என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.

இந்நிலையில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் கமர்சியல் படத்திற்கு இசையமைக்க உள்ளாராம் அனிருத்.

இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தனுஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவருக்கும் அந்தப் பீப்பாடல் சர்ச்சையால் சிறிது பிளவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top