Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேற லெவலில் மாஸ் காட்டும் தனுஷ்.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த அடுத்த பட அறிவிப்பு
தற்போது தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் தனுஷ் ஒருவர் மட்டுமே. கிட்டத்தட்ட நான்கைந்து படங்கள் கைவசம் கொண்டு நான்கிலும் தொடர்ந்து ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இதில் ஹிந்தி படமும் ஒன்று.
தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது ரசிகர்கள் அதிர்ச்சியளித்துள்ளார் தனுஷ். துருவங்கள் பதினாறு, நரகாசுரன், மாபியா போன்ற படங்களை இயக்கிய இளம் இயக்குனரான கார்த்திக் நரேனுடன் சேர்ந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை பட்டாஸ் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
அசுரன் படத்திற்கு பிறகு மீண்டும் ஜிவி பிரகாஷ் ஐந்தாவது முறையாக தனுஷ் படத்திற்கு தனுஷ் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதுவே இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

D43
மேலும் சுவாரசியமாக 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆகையால் 2020 ஆம் ஆண்டு தனுசுக்கு குறைந்தது மூன்று படங்களாவது ரிலீஸ் ஆகிவிடும் என்பது மட்டும் உறுதி.
அடிச்சி தூங்குங்க..
