fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தனுஷின் கலாட்டா கல்யாணம் விமர்சனம்.. அடித்து தூள் கிளப்பிய ட்விஸ்ட்

Reviews | விமர்சனங்கள்

தனுஷின் கலாட்டா கல்யாணம் விமர்சனம்.. அடித்து தூள் கிளப்பிய ட்விஸ்ட்

பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய், இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் நேரடியாக டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகியுள்ள படம் ‘அத்ரங்கி ரே’. இதன் தமிழ் டப்பிங் தான் கலாட்டா கல்யாணம்.

கதை – டெல்லியில் பி ஜி படிக்கும் மாணவர் தனுஷ் (விசு), ஒரு வாரத்தில் அவருக்கு நிச்சியதார்தம் நடக்க உள்ள நிலையில், மருத்துவ கேம்புக்காக பீகார் செல்கிறார் தனது நண்பர்களுடன்.

வீட்டை விட்டு பல முறை தனது காதலருடன் ஒட முயற்சித்தவர் சாரா அலி கான் (ரிங்கு ). போதும் டா சாமி என எவனையாவது பிடித்து இவளுக்கு கல்யாணம் முடித்துவிட திட்டம் போடுகின்றனர் குடும்பத்தினர். ஆல் மாறாட்டத்தில் தனுஷ் மாப்பிள்ளை ஆகிறார். திருமணம் முடிந்து டெல்லி திரும்புகிறார். மேஜிக் மேன் ஆன தனது காதலன் சில நாட்களில் வந்துவிடுவான் என நாயகி சொல்கிறார். புது பெண் நுழைய, அனைவருக்கும் விஷயம் தெரிய தனுஷின் நிச்சயதார்த்தம் நிற்கிறது. அழுது கொண்டே தனுஷ் டெல்லி வருகிறார், தனக்கு சாரா மீது காதல் வந்துவிட்டதாக சொல்கிறார். அதே நேரத்தில் சாராவின் காதலன் அக்ஷய் (சாஜித் அலி கான்)நுழைகிறார்.

நாயகி காதலுடன் சென்று விடுவாள் என நினைக்கும் நேரத்தில் சாராவின் காதலன் நிஜமானவன் அல்ல, அவன் சாராவின் கற்பனையில் தோன்றுபவன் என தனுஷ் மற்றும் அவரின் நண்பர்களுக்கு புரிகிறது.

மனோதத்துவ முறையில் மருந்து மாத்திரை, மற்றும் அவளின் போக்கில் சென்று உண்மையை புரிய வைக்க தனுஷ் பாடுபடுகிறார். சாராவின் கற்பனை காதலன் நிஜத்தில் யார்? இறுதியில் இந்த ஜோடி இணைந்ததா என்பதே மீதி கதை.

சினிமாபேட்டை அலசல் – முதல் பாதி காமெடியாக சென்றாலும் பல லாஜிக் குறைபாடுகள். தனுஷ் மட்டுமே தனி ஆளாக படத்தை நகர்த்தி செல்கிறார். மனிதர் படு ஸ்மார்ட். சாரா அலி கானுக்கு மிகவும் முக்கிய கதாபாத்திரம், அந்த ரோலின் அழுத்தத்தை அவர் சமரத்தியமாக தாங்கி நடித்துள்ளார். அக்ஷய் குமாருக்கு கெஸ்ட் ரோல் தான், என நாம் நினைக்கும் நேரத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தன் நடிப்பினால் அசத்தி விட்டார். ரஹ்மானின் இசை மிகப்பெரிய பிளஸ். குழந்தை பிறந்த பின்பு கூட வேறு மதத்தை சேர்ந்தவனை திருமண செய்த பெண்ணிற்கு ஏற்படும் கொடூரம் நம்மையும் உறைய வைக்கிறது.

சினிமாபேட்டை வெர்டிக்ட்  தனுஷ் – சாரா அலிகானின் இப்படம் இரண்டாம் பாதியில் நம்மை மிகவும் சோதிக்கிறது. அக்ஷய் கதாபாத்திரம் ட்விஸ்ட் குழப்பி அடிக்கிறது. எனினும் கடைசி 20 நிமிடங்கள் இந்த பின்னடைவுகளை மறந்து நம்மை கவர்ந்து விடுகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான முந்தையை பாலிவுட் படமான ராஞ்சனா படத்தை விட இது சுமார் தான். எனினும் முக்கோண காதலில் இது வேற வகையறா தான். தனுஷ் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டாட்டம் தான் ஆனால் பாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு அதிக திருப்த்தி தராது என்பதே நிஜம்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2 . 75 / 5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Reviews | விமர்சனங்கள்

அதிகம் படித்தவை

To Top